கொடைக்கானல்: யானைகள் நடமாட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த கொடைக் கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை நேற்று அனுமதி வழங்கியது.
கொடைக்கானலில் பாது காக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை யினரின் அனுமதியை பெற வேண்டும். கடந்த சில நாட்களாக, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கும் பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. வனத்துறையினரின் தடையால் இப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பய ணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் யானைகள் பேரிஜம் ஏரிப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனு மதி அளித்துள்ளது.
» மாநகராட்சியின் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள்
» சேலத்தில் வெயிலின் தாக்கம் 103.7 டிகிரி; ஈரோட்டில் 105 டிகிரி பதிவு
மேலும் சுற்றுலா வாகனங்கள் மெதுவாகச் செல்லவும், அதிக ஒலி எழுப்பாமல் செல்லவும், பகல் 2 மணிக்குள் அப்பகுதியில் இருந்து திரும்பி விடவும் வனத் துறை அறிவுறுத்தி உள்ளது. சீசன் நேரத்தில் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல தடை நீக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
1 day ago
சுற்றுலா
2 days ago
சுற்றுலா
11 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
21 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
25 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago