கொடைக்கானலில் ரோஜா செடிகள் கவாத்து பணி: கோடை சீசனுக்காக தயாராகும் ரோஸ் கார்டன்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு ரோஸ் கார்டனில் ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணி நடந்து வருகிறது.

கொடைக்கானலில் அப்சர் வேட்டரி பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் தோட்டக்கலைத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இங்கு 1,500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படு கின்றன.

இந்தச் செடிகளைப்பராமரிப் பதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொடைக்கானலில் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ரோஸ் கார்ட னில் பூத்துக் குலுங்கும் பல்வேறு வகையான ரோஜாப் பூக்களை கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு ரோஜா செடிகளில் பூக்கள் மலர்வதற்கு ஏற்ற வகையில் கவாத்து செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான பணியில் பராமரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE