கீழடி அகழ் வைப்பகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்துவதற்கான பணி: செயலர் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ் வைப்பகத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதையடுத்து அகழ் வைப்பகத்தில் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவற்கான பணி தற்போது நடந்து வருகிறது. நேற்று சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் அகழ் வைப்பகத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழங்கால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்த முறைகளை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அகழ் வைப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வைப்பகம் செட்டி நாடு கலைநயத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையும், என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் (பொ) மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் மணிகண்டன், ஊரகவளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE