வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கத்தில் பிப்.15-க்கு பிறகு அனுமதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: மூன்றாண்டுகளாக மூடியுள்ள, வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கத்தில் வரும் 15-ம்தேதிக்குப் பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

புதுவை கடற்கரையோரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதை தாமதமின்றி திறக்க வேண்டும் என்று, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறையின் ஒரு பிரிவான கலங்கரை விளக்கங்கள் இயக்க துறையின் சென்னையில் உள்ள துணை டைரக்டர் ஜெனரலுக்கு புதுவை மாநில பாஜக சிறப்பு அழைப்பாளர் ஏ வி வீரராகவன், மனு அனுப்பினார்.

இதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கலங்கரை விளக்கங்கள் இயக்ககத்தின் இயக்குநர் கார்த்திக் சென்சுதர் ஏ. வி.வீரராகவனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கரோனா பெருந்தொற்று காரணமாக இக்கலங்கரை விளக்கம் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது கட்டிட பராமரிப்பு பணிகள் முடிந்து, வருகிற பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு பார்வையாளர்கள் அனு மதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE