தூத்துக்குடி: ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ‘எம்.எஸ். அமீரா' என்றசொகுசு பயணிகள் கப்பலை இயக்கிவருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம் கொண்டது. 13 அடுக்குகளுடன் 413 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 835 பயணிகள் பயணம் செய்யலாம்.
மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. கப்பலில் 3 ஹோட்டல்கள், நூலகம், விளையாட்டு கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த சொகுசு கப்பல் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு உலகம் முழுவதும் வலம் வருகிறது. கடந்த டிசம்பர் 22-ம்தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ்துறைமுகத்தில் பயணத்தை தொடங்கியது.
125 நாட்களில் 25 நாடுகளுக்கு பயணம் செய்து 26.4.2023 அன்று ஜெர்மனியில் பயணத்தை முடிக்கிறது. இக்கப்பல் மால்டா, எகிப்து, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 8-ம் தேதி மும்பை வந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்து, நேற்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி வஉசிதுறைமுகம் வந்தடைந்தது.
கப்பலில்ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 698 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் சுற்றுலாவுக்காக இக்கப்பலில் புறப்பட்டுச் செல்கின்றனர். கப்பலில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வஉசி துறைமுகத்தை உற்சாகமாக பார்வையிட்டனர். அப்போது தூத்துக்குடி அரசுஇசைப்பள்ளி மாணவர்கள் சார்பில்மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் அவர்களை துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மற்றும் துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கதீட்ரல் ஆலயம், தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயம் ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்துஉப்பளங்களுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வெளிநாட்டு பயணிகளுடன் கப்பல் இரவு 7 மணி அளவில் கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
2 days ago
சுற்றுலா
3 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
20 days ago
சுற்றுலா
29 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago