சூறைக்காற்றால் படகு போக்குவரத்து பாதிப்பு: குமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று சூறைக்காற்றால் கடல் சீற்றம் நிலவியது. இதனால் படகு போக்குவரத்து மதியம் வரை ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சபரிமலை சீஸன் காரணமாக கன்னியாகுமரியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடல் நீர்மட்டம் தாழ்வு, சூறைக்காற்று, கடல் சீற்றம் போன்ற நேரங்களில் படகு போக்குவரத்து பாதிக்கப்படுவது இயல்பு. கடந்த ஒன்றரை மாதங்களாக படகு சேவை பாதிப்பின்றி இயங்கியது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து கடும் சூறைக்காற்று வீசியதுடன், கடல் சீற்றமாகவும் காணப்பட்டது.

இதனால் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படகு இல்லத்துக்கு வந்த நிலையில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான போர்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் மதியத்துக்கு பின்னர் கடலில் இயல்பு நிலை திரும்பியதால் மதியம் 1 மணிக்கு பின்னர் விவேகானந்தர் பாறைக்கு படகு இயக்கப்பட்டது. ஆனாலும் குறைவான பயணிகளே விவேகானந்தர் மண்டபம் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்