தேனியில் பனியால் களையிழந்த சுற்றுலா: ஐயப்ப பக்தர்களுக்காக சைவத்துக்கு மாறிய அசைவ ஹோட்டல்கள்

By என்.கணேஷ்ராஜ்

உத்தமபாளையம்: பனி தொடர்வதால், தேனி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இருப்பினும், ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால் சபரிமலை வழித் தடத்தில் உள்ள அசைவ மோட்டல்கள், ஹோட்டல்கள் அனைத்தும் சைவ ஹோட்டல்களாக மாறி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்குப் பிறகு, மகர பூஜைக்காக கடந்த 29-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேனி வழியே சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதுவரை வெளிமாநில பக்தர் களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், சில நாட்களாக தமிழக பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. பலரும் வாகனங்கள், பாதயாத்திரை மூலம் தேனி மாவட் டத்தை கடந்து சென்று கொண்டி ருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட சிலரே, தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்டு பயணத்தை தொடர்கின்றனர்.

ஏராளமானோர் வழிநெடுகிலும் உள்ள ஹோட்டல்களிலேயே சாப்பிடும் நிலை உள்ளது. ஆகவே, தேனி மாவட்ட புறவழிச்சாலை ஓரங்களில் அமைந்துள்ள அசைவ மோட்டல்கள், ஹோட்டல்கள் சைவ உணவை தயாரித்து விற்கின்றனர். இதற்காக அசைவ உணவு வகைகளை தயாரிப்பதை நிறுத்தி விட்டு சைவ உணவு அறிவிப்புகளை பெரியளவில் விளம் பரப்படுத்தி வருகின்றன.

மேலும் பிளக்ஸ் மற்றும் போர்டுகளில் ஐயப்பன் படங்களை அச்சிட்டு சைவ உணவு குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளன. உணவகங்களின் முன்பகுதியில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் வசதிகளை செய்துள்ளனர். வழி நெடுகிலும் அனைத்து ஹோட்டல்களிலும் ஐயப்பன் பாடல்களே ஒலிக்கின்றன. மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூட லூர், லோயர்கேம்ப் உள்ளிட்ட சபரிமலை வழித்தடச் சாலை நெடுகிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.

இது குறித்து உணவக உரிமை யாளர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக இந்த வழித்தடத்தில் கேரள, தமிழக, கர்நாடக, வடமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் செல்வர். இவர்களுக்காக உள்ளூர் முதல் சைனா வரையிலான அசைவ வகைகள், துரித உணவுகளை தயாரித்து வந்தோம்.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகம் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், அசைவம் புழக்கத்தை பக்தர்கள் விரும்புவ தில்லை. ஆகவே சபரிமலை சீசன் முடியும் வரை சைவ உண வகங்களாக மாற்றி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்