மதராஸ் ஆக இருந்து சென்னையாக மாறி, பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது சிங்கார சென்னையாக மாறி வரும் நமது சென்னைக்கு இன்று 383-வது பிறந்தாள். ஆகஸ்ட் 22-ம் தேதி 1639-ம் ஆண்டில் உருவான சென்னை இன்றய தினம் 383-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 383 ஆண்டு கால வரலாற்றில் சென்னை பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இதில் ஆறு முக்கிய மாற்றங்களை இங்கு பார்ப்போம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் படகுகள்: சென்னையையும் செயின்ட் ஜார்ஜ் கேட்டையையும் பிரிக்கவே முடியாது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழகத்தின் அரசு நிர்வாகம் இங்கு இருந்துதான் செயல்பட்டு வந்ததுள்ளது. சென்னை தோன்றிய நாளில்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. அதாவது, 1639-ம் ஆண்டுதான் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. சென்னைக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் ஒரே வயதுதான். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான். அந்தக் காலத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் படகுகள் சென்று கொண்டிருந்தன. இன்று கோட்டைக்கு அருகில் என்ன இருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
பல்லவனும் டபுள் டக்கரும்: சென்னையில் பேருந்து சேவை வழங்கி வரும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் 1972-ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டபோது மொத்தம் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை 1,029. தற்போது உள்ள பிராட்வே பேருந்து நிலையம் அந்தக் காலத்தில் சென்னையில் இருந்து மிகப் பெரிய பேருந்து நிலையம் ஆகும். தற்போது உள்ள தி.நகர், அடையாறு, வடபழனி ஆகிய இடங்களில் பனிமனைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு பல்லவன் பிரிக்கப்பட்டு அம்பேத்கர் போக்குவரத்து கழகம் உருவாக்கப்பட்டது. ஒரு காலத்தில் டபுள் டக்கர் ஓடிய சென்னை சாலைகளில் இன்று வெள்ளை, டீலக்ஸ், ஏசி பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ராயப்பேட்டையும் ராஜீவ் காந்தியும்: சென்னையில் உள்ள ராயப்பேட்டை, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகள் நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டவை. ராஜீவ்காந்தி மருத்துவமனை 1664-ம் ஆண்டும், ராயப்பேட்டை மருத்துவமனை 1911-ம் ஆண்டும், ஸ்டான்லி மருத்துவமனை 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைத் தவிர்த்து தற்போது உள்ள சைதாப்பேட்டையில் குழந்தைகளுக்கான புறநகர் மருத்துவமனையும் செயல்பட்டு வந்துள்ளது. இப்போது மட்டுமல்ல அப்போதும் சென்னை மருத்துவத் துறையில் முன்னோடியாக இருந்துள்ளது என்பதற்கு இதுதான் சான்று.
புத்தகக் காட்சி: சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்னை புத்தக் காட்சி. இந்தப் புத்தகக் காட்சி 1977-ம் ஆண்டு மதாரஸ் புத்தகக் காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தகக் கண்காட்சி முதன்தலில் மவுன்ரோட்டில் உள்ள மதராச ஏ ஆசாம் பள்ளியில்தான் நடைபெற்றது. முதல் புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 22 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது பெரியத் திடல்களில் 800 அரங்குகளுடன் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
பாரீஸ் கார்னர்: இன்றும் சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றாக இருப்பது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனை. இந்த பாரிமுனைக்கு முன்பு உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையும் சென்னையில் முக்கிய அடையாளமாக உள்ளது. அந்தக் காலத்தில் இதுபோன்ற பெரிய கடைகள் இல்லாவிட்டாலும் இன்றைக்கு உள்ளது போன்று பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ள பகுதியாக இருந்துள்ளது பாரீஸ் கார்னர்.
வால்டாக்ஸ் சாலை வணிக முனையம்: சென்னையில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்த சாலைகளில் ஒன்று வால்டாக்ஸ் சாலை. சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த சாலை அந்தக் காலத்தில் வணிக முனையமாக இருந்துள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தங்கும் இடங்கள், உணவகங்கள் என்று அனைத்து வணிகங்களும் நிறைந்த சாலையாக இந்த சாலை இருந்து. இந்த சாலை 1772-ம் ஆண்டில் சாலையை ஓட்டி சுவர் கட்டப்பட்டதால் இந்த சாலைக்கு வால்டாக்ஸ் சாலை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
2 hours ago
சுற்றுலா
9 days ago
சுற்றுலா
17 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
21 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago