கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: ஆண்​டு​தோறும் பூக்​கும் ‘ஸ்ட்​ரோபிலாந்தஸ் கார்​டிஃ​போலியா’ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்​கானல் மலைப் பகுதி​யில் பூத்​துக் குலுங்​கு​கின்றன.

உலகெங்​கிலும் 255 வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. தமிழகத்​தில் கொடைக்​கானல் மலைப் பகுதி​யில் 12 ஆண்டு​களுக்கு ஒரு முறை பூக்​கும் நீலக்​குறிஞ்சி, கருங்​குறிஞ்சி, 7 ஆண்டு​களுக்கு ஒருமுறை பூக்​கும் சிறு குறிஞ்சி என 20-க்​கும் மேற்​பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. குறிஞ்​சி​யின் பெயரில் கொடைக்​கானலில் முரு​கப்​பெரு​மான் குறிஞ்சி ஆண்ட​வராக காட்சி அளிக்​கும் கோயிலும் உள்ளது. குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்​தில் இருந்து 1,200 முதல் 2,500 மீட்டர் உயரத்​தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.

இந்நிலை​யில், ஆண்டு​தோறும் பூக்​கும் ‘ஸ்ட்​ரோபிலாந்தஸ் கார்​டிஃ​போலியா’ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்​கானல் மலைப்​பகு​தி​யில் பூத்​துக் குலுங்​கு​கின்றன. இப்பூக்கள் டிசம்பர் முதல் பிப்​ரவரி மாதம் வரை பூக்​கும். நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்​களில் கண்களுக்கு விருந்து படைக்​கும் இந்த அபூர்வ மலர் பூத்​திருப்​பதை, சுற்றுலாப் பயணி​களும், உள்ளூர் மக்களும் ஆச்சரி​யத்​துடன் கண்டு ரசித்தும், புகைப்​படம் எடுத்​தும் மகிழ்​கின்​றனர்.

இதுகுறித்து தோட்​டக்​கலைத்துறை​யினர் கூறும்​போது, “குறிஞ்சி மலர்​களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான ‘ஸ்ட்​ரோபிலாந்தஸ் கார்​டிஃ​போலியா’ வகை குறிஞ்சி மலர்​கள், கடந்த 2023-க்கு பிறகு தற்போது கொடைக்​கானல் மலைப் பகுதி​யில் பூத்​துக் குலுங்​கு​கின்றன. இந்த வகை ஆண்டு​தோறும் பூக்​கும் தன்மை கொண்​டது. நீல நிறத்​தில் இருப்​ப​தால் பலரும் அதனை நீலக்​குறிஞ்சி மலர் என்று கருதுகின்​றனர். நீலக்​குறிஞ்சி மலர்​கள் 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மட்டுமே பூக்​கும், தற்​போது பூத்​துள்ளது அவை அல்ல” என்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

14 days ago

மேலும்