புதுச்சேரியில் அனுமதியின்றி சுற்றுலா விடுதிகளாக மாறும் வீடுகள்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் ஒயிட் டவுன் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரத்தின் பிற பகுதிகளில் தங்க விருப்பப்படுவதால், இப்பகுதியில் குடியிருக்கும் பலரும் தங்களது வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக்கி விட்டனர். இதில், போதிய பாதுகாப்பு வசதி இல்லை. முன்பு குறைந்த கட்டணம் வாங்கியவர்கள் தற்போது அதிகளவில் வாங்குகின்றனர். பல இடங்களில் அறிவிப்பு பலகையே இல்லாமல், ஆன்லைன் மூலமே விடுதிகளுக்கான பதிவு நடக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

தொடர் விடுமுறை தினங்கள் வந்தால், கூடுதல் கட்டணமும் வசூலிக்கின்றனர். இதனால் சிலர் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதிகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறுகையில், “புதுச்சேரிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா வந்தால் விடுதி கட்டணங்கள் அலற வைக்கிறது. அரசு இதை முறைப்படுத்த வேண்டும்.

வீடுகளை சற்றே மாற்றம் செய்து, அனுமதியில்லாமல் பல விடுதிகள் இருக்கின்றன. இது சரியானது அல்ல. இதில் அரசின் நடவடிக்கை அவசியம். அரசுதான், சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புகார் தெரிவிக்கும் வசதியையும், அதற்கான எண்களையும் பொது இடங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வீடுகளாக மாறிய இந்த விடுதிகளில் தங்கியவர்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் அடுத்து பொங்கல் தொடர் விடுமுறை வர இருக்கிறது. இதுபோன்ற தொடர் விடுமுறைகளை குறிவைத்து, இப்படி தாறுமாறாக கட்டணத்தை வசூலிக்கும் இந்த திடீர் விடுதிகள் மீது புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.

அனுமதியுடன் இயங்குகிறதா தனியார் சுற்றுலா படகுகள்? - புதுச்சேரியில் சுண்ணாம்பாற்றில் அரசு படகு குழாம் உள்ளது. இந்தச் சூழலில் தற்போது தனியார் படகுகள் பல இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல சுற்றுலாத்துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2018-க்கு பிறகு தேங்காய்த்திட்டு துறைமுகம், பாண்டி மெரினா, முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம், வீராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இருந்து தனியார் மூலம் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்காக அவர்கள் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றனர். இதை நம்பி சுற்றுலா பயணிகள் இதில் ஏறுகின்றனர்.

பல படகுகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. “படகுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி பலரையும் ஏற்றுகின்றனர். இவ்வாறு படகில் பயணிகளைச் ஏற்றி செல்ல உரிமம் உள்ளதா என்பது தெரியவில்லை. படகில் அமர்ந்த பிறகுதான் லைப் ஜாக்கெட்டுகள் தரப்படுகின்றன. அதிகாரிகள் இதை ஆய்வு செய்து, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

14 days ago

சுற்றுலா

24 days ago

மேலும்