தமிழகத்தில் மலையேற்ற கட்டணம் 25% வரை குறைப்பு

By ஆர். ஆதித்தன்

கோவை: தமிழகத்​தில் 40 வழித்​தடங்​களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது.

2018-ல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்​தனர். இதையடுத்து, மலையேற்​றத்​துக்கு வனத் துறை தடை விதித்​தது. தற்போது 6 ஆண்டு​களுக்​குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலை​யும், விழிப்பு​ணர்​வை​யும் ஏற்படுத்​தும் வகையில் மலையேற்​றத்​துக்கு மீண்​டும் அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக வனத் துறை ‘ஆன்​லைன் ட்ரெக்​கிங் டிரெ​யில் அட்லஸ்’ மூலம் 40 மலையேற்ற வழித்​தடங்​களுக்கான இணையதளத்தை (www.trektamilnadu.com) உருவாக்கி​யுள்​ளது. கடந்த நவ. 1-ம் தேதி முதல் முன்​ப​திவு செய்து, மலையேற்​றத்​துக்கு அழைத்​துச் செல்​கின்​றனர். மலையேற்றப் பாதைகள் எளிதான, மிதமான மற்றும் கடின​மானவை என 3 பிரிவு​களாக வகைப்​படுத்​தப்​பட்​டுள்ளன.

40 மலையேற்ற வழித்தடங்கள்... தமிழகத்​தில் மொத்​த​முள்ள 40 மலையேற்ற வழித்​தடங்​களில் நீலகிரி​யில் 10, கோவை​யில் 7 மற்றும் திருப்​பூரில் ஒரு மலை யேற்ற வழித்​தடங்கள் அறிவிக்​கப்​பட்​டுள்ளன. இதுதவிர, திண்​டுக்​கல், சேலம், தேனி, நெல்லை, தென்​காசி, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், கன்னி​யாகுமரி, விருதுநகர், மதுரை, திரு​வள்​ளூர் ஆகிய மாவட்​டங்​களில் மலையேற்ற வழித்​தடங்கள் உள்ளன.

மலையேற்​றத்​தில் நபர் ஒருவருக்கு ரூ.599-ல் தொடங்கி அதிகபட்​சமாக ரூ.5,099 வரை கட்டணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. எளிதான பிரி​வில் ரூ.599 முதல் ரூ.1,449, மிதமான பிரி​வில் ரூ.1,199 முதல் ரூ.3,549, கடினமான பிரி​வில் ரூ.2,799 முதல் ரூ.5,099 வரை கட்டணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. கட்ட​ணத்​துடன் 5 சதவீதம் ஜிஎஸ்​டி-யை கூடு​தலாக செலுத்த வேண்​டும். மலையேற்றம் மேற்​கொள்​ளும் அனைத்து பங்கேற்​பாளர்கள் மற்றும் வழிகாட்​டிகளுக்​கும் காப்​பீடு வழங்​கப்​படுவது குறிப்​பிடத்​தக்​கது.

இதற்​கிடையே, மலையேற்ற வழித்​தடத்​துக்கு அறிவிக்​கப்​பட்ட கட்டணம் மிக அதிகமாக இருப்​ப​தாக​வும், கட்ட​ணத்​தைக் குறைக்க வேண்​டும் என்றும் இயற்கை ஆர்வலர்​களும், மலையேற்றம் செல்​வோரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலை​யில், மலையேற்​றத்​துக்கான கட்ட​ணத்தை 25 சதவீதம் குறைத்து வனத் துறை அறிவித்​துள்ளது. எளிதான பிரிவுக்கு ரூ.539 முதல் ரூ.1,299, மிதமான பிரி​வில் ரூ.1,019 முதல் ரூ.3,019, கடினமான பிரி​வில் ரூ.2,099 முதல் ரூ.3,819 என கட்டணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஓசை அமைப்பு தலைவர் காளி​தாசன் கூறும்​போது, “மலை​யேற்றக் கட்டண சலுகை அறிவிக்​கப்​பட்​டிருப்பது வரவேற்​கத்​தக்​கது. அதேநேரத்​தில், மலையேற்​றத்​துக்கு செல்​வோர் கொண்​டாட்ட மனநிலை​யிலோ அல்லது சாகச மனநிலை​யிலோ வனப்பகுதிக்​குள் செல்​லக்​கூடாது. இயற்கை பற்றிய புரிதல், உணர்தல் என்ற மனநிலை​யில் மலையேற்றம் செல்ல வேண்​டும்” என்றார்.

கட்டணம் மாறுபட வாய்ப்பு உள்ளது: வனத்​துறை​யினர் கூறும்​போது, “கர்​நாடகா போன்ற மாநிலங்​களில் சீசன் காலங்​களில் கட்டணச் சலுகை அறிவிக்​கப்​படு​கிறது. அதேபோல, தமிழகத்​தில் கட்டணச்சலுகை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மலையேற்றத் திட்டம் புது​மை​யானது என்ப​தால், இயற்கை ஆர்வலர்​களின் வருகை உள்​ளிட்​ட​வற்றை கணக்​கில் ​கொண்டு கட்​ட​ணம் ​மாறுபட வாய்ப்பு​கள் உள்ளன” என்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

17 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

25 days ago

சுற்றுலா

26 days ago

சுற்றுலா

27 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

2 months ago

சுற்றுலா

2 months ago

மேலும்