கோத்தகிரியில் பூத்துக் குலுங்கும் அபூர்வ நீலக்குறிஞ்சி!

By ஆர்.டி.சிவசங்கர்


கோத்தகிரி: கோத்தகிரி அருகே கன்னேரி முக்கு பள்ளத்தாக்கில்,12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிஞ்சி மலர்களில் பல வகை உண்டு. நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இந்தச் செடிகளின் உயரம், 30 முதல் 60 செ.மீ. வரை இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் செடிகள் முதல், 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர்ச் செடிகள் வரை ஏராளமான வகைகள் குறிஞ்சியில் உண்டு.அதில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் தனித்துவமாக கருதப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே கன்னேரி முக்கு மலைச்சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் செடிகள் உள்ளன. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடிகள், இப்போது பூத்துள்ளன. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை, சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE