குற்றாலத்தில் சாரல் சீஸன்: அருவிகளில் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், சாரல் சீஸன் தொடங்கியுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்று, மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்.தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசுகிறது.

அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

8 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

16 days ago

சுற்றுலா

16 days ago

சுற்றுலா

18 days ago

சுற்றுலா

18 days ago

சுற்றுலா

18 days ago

சுற்றுலா

18 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

25 days ago

மேலும்