உதகை: ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வந்த லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி, நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சி ஆகியவை நடைப்பெற்றன.
இந்நிலையில், ஊட்டி கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுற்றுலாத் துறை சார்பில் இன்று உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டிகள் நடைப்பெற்றன. இந்த படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
» வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 91,000 சுற்றுலா பயணிகள் நடப்பாண்டில் வருகை
» குற்றாலத்தில் அபாய காலங்களில் அருவிக் கரையில் இருந்து மக்களை வெளியேற்ற ஒலி எழுப்பும் கருவி அமைப்பு
இந்தப் படகுப் போட்டிகள் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியர் போட்டி, பத்திரிகையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.
உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகுப் போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
7 hours ago
சுற்றுலா
3 days ago
சுற்றுலா
3 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
6 days ago
சுற்றுலா
6 days ago
சுற்றுலா
6 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
9 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
20 days ago
சுற்றுலா
20 days ago
சுற்றுலா
21 days ago