ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 24-ம் தேதி காலை அளவீட்டின் போது விநாடிக்கு 2,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இது, 25-ம் தேதி மாலையில், வினாடிக்கு, 1,500 கன அடியாக குறைந்தது. 26-ம் தேதியும் விநாடிக்கு 1,500 கன அடியாகவே நீர்வரத்து தொடர்ந்தது. இந்நிலையில், இன்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்தது. ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு நீர்வரத்து ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.

நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் காவிரியாற்றில் முழுமையாக வெளியில் தெரிந்து வந்த பாறைகள் தற்போது தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. கூடுதல் நீர்வரத்தால், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரியாற்றில் பரிசலில் பயணித்து பல்வேறு இடங்களையும் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE