உதகை: உதகை மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசுதாவரவியல் பூங்காவில் 126-வதுமலர்க் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 1.20லட்சம் கார்னேஷன், ரோஜா, கிரைசாந்திமம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பல்வேறுஅலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலர் அலங்காரங்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும், பூங்காவில் உள்ள மரங்கள், பழமையான கட்டிடங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் மின்னொளியில் பூங்கா ஜொலித்தது.
இந்நிலையில், நடப்பாண்டு சிறப்பு அம்சமாக உதகை தாவரவியல் பூங்காவில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை புல்வெளியில் லேசர் லைட் ஷோ நடத்தப்பட்டது. லேசர் லைட் மூலம் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் தத்ரூபமாக காட்டப்பட்டனர்.
» பள்ளி குழந்தைகளிடம் அதிகரிக்கும் கிட்டப்பார்வை குறைபாடு
» கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்; தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பொது சுகாதார துறை
தொடர்ந்து, பல வண்ணங்களில் 3டி வடிவிலான லேசர் ஒளி மூலம் வர்ணஜாலம் நிகழ்த்தப்பட்டது. இதைக் கண்டகுழந்தைகள், நடனமாடி மகிழ்ந்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
4 hours ago
சுற்றுலா
1 day ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
16 days ago
சுற்றுலா
17 days ago
சுற்றுலா
26 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago