காசிக்கு ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயில்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஆர்சிடிசி சார்பில், திருநெல்வேலியில் இருந்து சென்னை வழியாக காசி, கயா உள்பட பல்வேறு இடங்களுக்கு ‘பாரத்கவுரவ்’ சுற்றுலா ரயில் இயக்கப் பட உள்ளது.

இந்திய ரயில்வேயின் சுற்றுலாபிரிவான ஐஆர்சிடிசி சார்பில்,‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6-ம் தேதி புறப்படுகிறது. இந்தரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யாஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்றுவர உள்ளது.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 11பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. 9 நாட்கள் கொண்டஇந்த பயணத்துக்கு ஒருவருக்கு கட்டணம் ரூ.18,550. இது தொடர்பான மேலும் தகவலுக்கு 9003140739, 8287932070, 9003140680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்தத்தகவல் ஐஆர்சிடிசியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

15 hours ago

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

12 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்