கோவை: கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதனால் சாடிவயல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். வார இறுதி நாளான நேற்று ஏராளமானோர் திரண்டனர். மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் பெரியவர்கள் 2196 பேரும், குழந்தைகள் 461 பேரும் நேற்று கோவை குற்றாலம் வந்திருந்தனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
1 hour ago
சுற்றுலா
1 day ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
5 days ago
சுற்றுலா
5 days ago
சுற்றுலா
6 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
9 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
11 days ago
சுற்றுலா
12 days ago
சுற்றுலா
21 days ago
சுற்றுலா
21 days ago