சுற்றுலா பயணிகளை கவர கொடைக்கானலில் ‘செல்ஃபி பாயின்ட்’

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர ‘செல்ஃபி பாயின்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளன. இங்கு வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வனத்துறை சார்பில் அந்தந்த சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவை யான கழிப்பறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை கவர மோயர் சதுக்கத்தில் காட்டு மாடு, தூண் பாறை பகுதியில் 3டி யானை உருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களை கவரும் வகையிலும், காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வனத்துறை சார்பில் தூண் பாறை பகுதியில் ‘ஐ லவ் ஃபாரஸ்ட் கொடைக்கானல்’ என்ற வாக்கியத்துடன் கூடிய செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக இந்த செல்ஃபி பாயின்டில் புகைப் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

56 mins ago

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

6 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

11 days ago

சுற்றுலா

12 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

21 days ago

மேலும்