கொடைக்கானலில் புதுப்பொலிவு பெறும் நட்சத்திர ஏரி!

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கோடை சீசனுக்கு முன்பாக, கொடைக்கானல் நட்சத்திர ஏரியை அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.24 கோடியில் நட்சத்திர வடிவிலான ஏரியை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஏரியில் உள்ள செடிகளை அகற்ற பிரத்தியேக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஏரியின் மேல் 160 அடி நீளத்துக்கு மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நடுவே 3 இடங்களில் நீரூற்று போல் காட்சி அளிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தும் ‘வாட்டர் ஃபில்டர்’ பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மரத்திலான வேலி போன்று காட்சி தரும் ‘எம்ஆர்பி’ எனும் மெட்டீரியல்களால் ஆன தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வேலி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஏரியைச் சுற்றிலும் 4.5 கி.மீ தூரத்துக்கு நடைபாதை சீரமைக்கப்பட்டு, அதில் கிரா னைட் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது தவிர, ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் 900 மின் விளக்குகள், அலங்கார விளக் குகள் பொருத்தப்பட உள்ளன.

நகராட்சித் தலைவர் செல்லத் துரை கூறுகையில், ஏரியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டு வரும் அலங்கார தடுப்பு வேலி 3 இடங் களில் இருந்து தயாரித்து கொண்டு வரப்படுகிறது. அவை வந்தவுடன் விடுபட்ட இடங்களிலும் வேலி அமைக்கப்படும். விரைவில் மேம்படுத்தப்பட்ட நகராட்சி படகு குழாம், புதிய படகுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கோடை சீசனுக்கு முன்பாக நட்சத்திர ஏரி புதுப்பொலிவு பெறும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE