குன்னூர்: கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் (ஜன. 10, 11) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குன்னூரில் 40 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. கனமழை காரணமாக குன்னூரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே அமைந்துள்ள ரயில்தண்டவாளத்தில் நேற்று காலைஅடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால், மலை ரயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயில், ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றிய பிறகு, 2 மணி நேரம் தாமதமாக குன்னூரை மலை ரயில் சென்றடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேஇன்றும், நாளையும் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
2 days ago
சுற்றுலா
3 days ago
சுற்றுலா
4 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
7 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
20 days ago
சுற்றுலா
29 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago