கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட குதிரை குத்திப்பட்டான் நடுகல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சி யகத்தில் 700 ஆண்டுகள் பழமையான, ‘குதிரை குத்திப்பட்டான்’ நடுகல், பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: போசள மன்னன் வீர ராமநாதனின் ஆட்சியின்போது, சின்னக்கொத்தூர் கிராமம், ‘குந்தாணி’ என்ற பெயரில் தலைநகரமாக இருந்துள்ளது. அப்போது, நடைபெற்ற பல்வேறு சண்டைகளில் உயிரிழந்த வீரர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட நடுகற்கள் அங்குள்ள குந்தாணியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன.

அதில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான, ‘குதிரை குத்திப்பட்டான்’ நடுகல் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வலது கையை மேலே தூக்கிய நிலையில், குத்து வாளால் குதிரையைக் குத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், குதிரையின் மீது அமர்ந்துள்ள வீரன், இவனை ஈட்டியால் குத்துவது போல் உள்ளது.

இச்சிற்பத்துக்கு மேலே உள்ள கல்வெட்டில், ‘சொக்கன் என்பவன் கருவாயன்பள்ளி என்ற ஊரில் நடந்த பூசலில் ஈடுபட்டுக் குதிரையைக் குத்தி இறந்துபட்டுள்ளான்’ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்