கோவாவுக்கு சுற்றுலா ரயில்: ஐஆர்சிடிசி ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: கொச்சுவேலியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக கோவா மட்கோனுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐஆர்சிடிசி செய்துள்ளது. பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், ஐஆர்சிடிசி சார்பில், கொச்சுவேலி - மட்கோன் இடையே சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உடுப்பி, மூகாம்பிகை கோயில், முருதேஸ்வர் கோயில்,சிருங்கேரி (சாரதா கோயில்),ஹொரநாடு (அன்னபூர்னேஸ்வரி கோயில்) உள்ளிட்ட யாத்திரை இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து டிச.7-ம் தேதிஅதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு, தென்காசி, மதுரை, திருச்சி,சென்னை எழும்பூர் வழியாக மட்கோனுக்கு டிச.8-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக, மட்கோனில் இருந்து டிச.10-ம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக கொச்சுவேலிக்கு டிச.12-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடைகிறது. இது தொடர்பாக கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவுக்கு 9003140680, 9003140682 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்