கொடைக்கானல் நகருக்குள் அதிகரிக்கும் காட்டு மாடுகள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சில ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது வழிதவறி காட்டு மாடுகள் நகர்ப் பகுதிக் குள் வருவது வழக்கம். அவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி விடுவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவு, தண்ணீருக்காக காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து கொடைக்கானல் நகருக்குள் நுழைவது அதி கரித்துள்ளது. அவை சாலையில் இங்கும் அங் கும் ஓடித் திரிகின்றன. இவற்றால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களோ, சுற்றுலாப் பயணிகளோ விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சிலர் காட்டுமாடு தாக்கி காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அடிக்கடி நகருக்குள் நுழையும் காட்டுமாடுகளால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, நகர்ப்பகுதிக்குள் காட்டுமாடுகள் நுழைவதை வனத்துறையினர் தடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட கொடைக்கானலைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது: உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டுமாடுகள் வனப்பகுதியில் இருந்து நகருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இது உள்ளூர் மக்களுக்கு பழகிப்போனது. ஆனால், விடுமுறை நாட்களில் அதிகமாக வரும் சுற்றுலாப் பயணிகள் போதிய விழிப்புணர்வு இன்றி, காட்டுமாடுகளை பார்த்ததும் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். சில சமயங்களில் அதுவே ஆபத்தாக முடியும் ஆபத்து உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்வதை தடுப்பதோடு மட்டுமல்லாமல், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுற்றுலா நகரான கொடைக்கானலில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண் காணிக்கவும், நகருக்குள் நுழைவதை தடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக கூட்டமாக நகருக்குள் வலம் வரும் காட்டுமாடுகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

4 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

19 days ago

சுற்றுலா

20 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்