கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் செப்.27-ம் ேததி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று அதன் பரிணாமம் சுற்றுச்சூழல் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்விச் சுற்றுலாஎன பலவாறாக வளர்ந்துள்ளது. சர்வதேச சுற்றுலாதலமாக விளங்கும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்ப நிலை இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் கொடைக்கானலை மிகவும் விரும்புகின்றனர். அதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இங்கு பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

இது தவிர, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவர, நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது நகராட்சி சார்பில் ரூ.24 கோடி செலவில் நட்சத்திர ஏரியை அழகுபடுத்தும் பணி நடக்கிறது. மேலும் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் ஹெலிகாப்டர் இறங்கு தளம், மன்னவனூரில் சாகச சுற்று லாத் தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே சமயம், கொடைக்கானல் ஏரியில் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும் என மானியக் கோரிக்கையின் போது சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் அறிவித்தார். ஆனால், தற்போது வரை ஆய்வு கள் மேற்கொள்ளவில்லை.

சென்னை அருகே முட்டுக் காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பக் கூடிய இடமாக இருக்கும் ஏரியில் மிதவை உணவகம் அமைக்க சுற்றுலாத் துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, சாகச சுற்றுலா மற்றும் மலைக் கிராமச் சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஆய்வு தொடங்கும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

2 days ago

சுற்றுலா

6 days ago

சுற்றுலா

6 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

9 days ago

சுற்றுலா

10 days ago

சுற்றுலா

12 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

13 days ago

சுற்றுலா

22 days ago

மேலும்