கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் குளித்து வருவாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட அரவேணு பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோருக்கு, நீர்வீழ்ச்சியின் காட்சி முனையை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதியை கடந்து, தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர். நீர் வீ்ழ்ச்சி பகுதியில் குளிப்பதுடன், சிலர் மது அருந்தி பாட்டில்களை உடைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சுழலில் சிக்கி பலர் இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளிப்பது மன வேதனை அளிக்கிறது. அங்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், திடீரென சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்புள்ளது. இதை கருத்தில்கொண்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கக்கூடாது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE