சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நவ.2-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவரை பாராட்டி வாழ்த்தினேன். அதை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்திப் பேசினார். அவரது மேலாளர் ஜான்சன் அறைந்ததில், எனதுசெவித்திறன் பாதிக்கப்பட்டது. ஆனால், விஜய்சேதுபதி தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி, ஜான்சன்ஜன.4-ல் ஆஜராக நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago