பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரம் - பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது :

By செய்திப்பிரிவு

கோவை மாநகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த மாதம் 11-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ்.புரத்தைசேர்ந்த மிதுன் சக்கரவர்த்தியை(31), போக்ஸோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் கோவை மேற்குப் பகுதி மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மேலும், நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மகளிர் போலீஸார் பரிந்துரையின்பேரில், மிதுன் சக்கரவர்த்தியைக் குண்டர் தடுப்புபிரிவின்கீழ் கைது செய்ய, மாநகரகாவல் ஆணையர் பிரதீப்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் குண்டர் தடுப்புப் பிரிவில் மிதுன் சக்கரவர்த்தி அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்