பிறந்தநாள் வாழ்த்து கூறிய - பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினி நன்றி :

By செய்திப்பிரிவு

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. 72-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள அவர், தனது பிறந்தநாளை மனைவி, மகள்கள், மருமகன், பேரன்கள் என குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிறந்தநாளில் என்னை நெஞ்சார வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள், கட்சிகளின் நண்பர்களுக்கும், இளையராஜா, கமல்ஹாசன், பாரதிராஜா, வைரமுத்து, அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலக நண்பர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும், எனது ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்