வருவாய் நிர்வாக ஆணையராக, வணிகவரி ஆணையர்எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
வருவாய் நிர்வாகம் மற்றும்பேரிடர் மேலாண்மை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக வரி ஆணையராக இருந்த எம்.ஏ.சித்திக், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, வணிகவரி ஆணையர் பதவியானது கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago