தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

தமிழில் மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம், உலக மக்களைச் சென்றடையும் நோக்கத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை மத்தியசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, உருது, மைதிலி, துளு,சம்ஸ்கிருதம், வங்க மொழி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய 10 இந்திய மொழிகளிலும், ரஷ்யன், சீனம், மலாய், ஜப்பானீஸ், ஜெர்மன்,அரபிக் உள்ளிட்ட 15 வெளிநாட்டு மொழிகளிலும் தொல்காப்பியம் மொழிபெயர்க்கப்பட உள்ளது.

விருப்பம் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் www.cict.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மொழிக்கு ரூ.5 லட்சம்வழங்கப்படும் என்று தமிழாய்வு நிறுவனஇயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்