பெங்களூரு இந்திய மேலாண்மைநிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஆர்.வைத்தியநாதனைகைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன், பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொருளாதாரம் தொடர்பான ஏராளமான நூல்கள், கட்டுரைகளை எழுதியவர், எழுதி வருபவர். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். தற்போது தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக உள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குபேட்டியளித்த ஆர்.வைத்தியநாதன், தமிழக திமுக அரசு மற்றும்கேரள கம்யூனிஸ்ட் அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் பலரும் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பேராசிரியர் ஆர்.வைத்தியநாதனை கைது செய்யதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. இது தவறான செயல்.எனவே, அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படக் கூடாது என்று காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அப்படி எந்த தகவலும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago