கல்லூரி பருவத் தேர்வுகள் குறித்து யுஜிசி பெயரில் வெளியான கடிதம்போலியானது என்று, பல்கலைக்கழக மானியக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து, அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்பகல்லூரிகளைத் திறந்து, நேரடிமுறையில் பாடங்கள், தேர்வுகள் நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. அதேபோல, பருவத் தேர்வுகளும் நேரடிமற்றும் இணையவழி என இருமுறைகளிலும் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையில், கரோனா தொற்று குறைந்துவிட்டதால், இனி அனைத்து பல்கலைக்கழகங் களும் பருவத் தேர்வுகளை இணையவழியில் நடத்தக்கூடாது. நேரடி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற உத்தரவை யுஜிசி வெளியிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் பரவிவருகிறது.
இதுகுறித்து யுஜிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பருவத் தேர்வுகள் தொடர்பாக யுஜிசி பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் கடிதம் போலியானது. சில விஷமிகள் திட்டமிட்டு, தவறானதகவல்களைப் பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம். யுஜிசியின் அதிகாரப்பூர்வ தகவல்களை https://www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்றனர்.
தமிழகத்தில் நடப்பு பருவத் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago