கார்த்திகை மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள், சபரிமலை மண்டல பூஜை காலம் போன்ற காரணங்களால் பூக்கள் தேவை அதிகரித்தது. இதனால், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.3,000-க்கு விற்ற மல்லிகை பூ, நேற்று ரூ.4,500 வரை விற்றது.
வழக்கமாக சுபமுகூர்த்த தினங்களில் 50 டன் பூக்கள் வரை தோவாளை மலர் சந்தைக்கு வரும். தற்போது மழையால் 10 டன் பூக்கள் மட்டுமே வருகிறது. தேவை அதிகமாக உள்ள நிலையில், குறைவான பூக்கள் வருவதால், விலை ஏற்றமடைந்துள்ளது. நேற்று காலை 9 மணிக்குள் அனைத்து பூக்களும் விற்றுத் தீர்ந்தன. திருமண தேவைகளுக்கு ரூ.5,000 கொடுத்து ஒருகிலோ மல்லிகை கேட்டாலும் கிடைக்கவில்லை. பிச்சிப்பூ கிலோ ரூ.2,000-க்கும், கிரேந்தி ரூ.270-க்கும் விற்பனை ஆனது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago