பாஜகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் - நன்கொடை அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் : கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாஜகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ.100 கோடி நன்கொடை அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புரூடன்ட் என்ற தேர்தல் நிதிஅறக்கட்டளை, கட்சிகள் பெற்றநிதி விவரங்களை கடந்த 20-ம்தேதி தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த2020-21 நிதியாண்டில் தனி நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.245 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. இந்த தொகையில், பாஜகவுக்கு மட்டும் 83 சதவீதம்நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது, அந்த நிதி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவருமான வரி சோதனை நடத்தப்பட்ட நிலையில், மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல்சர்வீஸ் நிறுவனம் மூலம் பாஜகவுக்கு மார்ட்டின் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடன்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது.

அவருக்கு எத்தகைய கைமாறுசெய்ய மோடி அரசு உறுதி அளித்திருக்கிறது, அவருக்கு எதிராக நாடு முழுவதும் நிலுவையில் உள்ளவழக்குகள் என்னவாகும் எனகேள்விகள் எழுகின்றன. இதேபோன்று, குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய எத்தனை மார்ட்டின்கள் தேர்தல் நன்கொடை பட்டியலில் இருக்கிறார்கள் என்பதுஇனிவரும் காலங்களில் தெரியவரும்.

சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர்ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததன் பின்னணி குறித்தும், அவருக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு குறித்தும் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்