மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கின்றனர் என்று, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த செய்தி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக குன்னூருக்கு விரைந்து சென்றார். உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார். மீட்பு பணிகளிலும்,இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசுசார்பில் அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின்தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். ‘இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கின்றனர். ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்றுவிழைகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago