மீன் நாற்றம் அடிப்பதாக கூறி மீனவப் பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தைப் போல், நரிக்குறவர் குடும்பத்தை இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டம், குளச்சலில் 3 நாட்களுக்கு முன்பு, வாணியக்குடியைச் சேர்ந்த மீன் வியாபாரி செல்வம்மேரி என்ற மூதாட்டி பேருந்தில் ஏறியபோது, மீன் நாற்றம் அடிப்பதாக கூறி இறக்கிவிடப்பட்டார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபோல், மற்றொரு சம்பவம் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில், வள்ளியூரைச் சேர்ந்த கணவன், மனைவி, சிறுவன் ஆகிய 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவல்
பேருந்து புறப்பட்டதுமே கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் 3 பேரையும் பேருந்தின் நடத்துநர் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். அவர்களின் துணிப்பை மற்றும் உடைமைகளை பேருந்தில் இருந்து வெளியே வீசியுள்ளார்.இதை அங்கு நின்றவர்கள் செல்பேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட்ட நடத்துநர் ஜெயதாஸ், ஓட்டுநர் நெல்சன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அரவிந்த் நடவடிக்கை மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago