ஜெயலலிதா நினைவிடத்தில் மோதலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த அமமுக பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாநினைவு தினம் கடந்த 5-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் காலை 10 மணிக்கு சென்றனர்.
அப்போது, நினைவிடத்தின் உள்ளே அமமுகபொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க காத்திருந்த அமமுகவினர், தினகரனுக்கு ஆதரவாகவும், சசிகலா வருகைக்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும் மாறி மாறி கோஷமிட்டனர். சிலர் ஓபிஎஸ், பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது, பழனிசாமியின் காரைஅமமுகவினரும், சசிகலா ஆதரவாளர்களும் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இததொடர்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் மாறன்அளித்த புகாரின்பேரில் அமமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மோதல், காலணி வீச்சு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சேப்பாக்கம் பகுதி அமமுக பொருளாளர் மாரிமுத்துவை (38) போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago