ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நாடெங்கும் அதன் சந்தை செயலிருப்பை தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தென்னிந்திய சந்தையில் அதன் வாடிக்கையாளர் தொடுமுனை அமைவிடங்களை 84 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டில் 38 ஆக இருந்த டீலர் வலையமைப்பை 2021-ல் 70 ஆக அதிகரித்துள்ளது. சேவை வழங்கும் அமைவிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாக செல்ல வேண்டு்ம என்ற யுக்தியை செயல்படுத்துகிறது. தென்னிந்திய டீலர் வலையமைப்பின் விரிவாக்கத்தால் விற்பனை 90 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
2019 டிசம்பரில் 19 நகரங்களில் இருந்த செயல்பாட்டை 2021 நவம்பர் மாதத்துக்குள் 38 ஆக, அதாவது இருமடங்காக நிறுவனம் அதிகரித்துள்ளது. மெட்ரோ பெரு நகரங்களோடு சேர்த்து ஷிமோகா, கரூர், திண்டுக்கல், மூவட்டுபுழா மற்றும் கண்ணூர் ஆகிய நகரங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற இந்நிறுவனம் தயாராக உள்ளது.
ஸ்கோடா விரிவாக்க செயல்பாடுகளுடன் புதிதாக அறிமுகம் செய்யப்படும் குஷாக் எஸ்யுவி ரக காருக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகள் இதுவரை கிடைத்துள்ளன.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்டு இயக்குநர் ஜாக்ஹாலிஸ் கூறும்போது, “எங்களுக்கு தென்னிந்தியா மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்றாகவும் எமது வளர்ச்சி செயல் உத்தியில் இன்றியமையாததாகவும் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வாகன தொழில் துறை கடும் சிரமங்களை சந்தித்தபோதிலும், எமது இந்த வளர்ச்சியானது, கூர்நோக்கத்துடன் கூடிய எமது விரிவாக்கத் திட்டதுக்கு நேர்த்தியான சான்றாக விளங்குகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago