குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலஅளவில் முதன்மை மேம்பாட்டு நிதி நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், சிட்கோ நிறுவனம், தாய்கோ வங்கியுடன், தொழில் துறை உட்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டத்தின் செயலாக்கம், இணைக்கடன் வழங்கும் திட்டங்களுக்காக நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
டிக் நிறுவனப் பொது மேலாளர் டி.கிருபாகரன், தாய்கோ வங்கி மேலாண் இயக்குந்ர் (பொறுப்பு) ஜி.குப்புராஜ், சிட்கோ பொது மேலாளர் ஆர்.பேபி ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும் போது, "தாய்கோ வங்கி உருவாக் கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 75 சதவீதநிதியை, தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிட்கோ நிறுவன நிலத்தின் மதிப்பை உயர்த்தியால், யாரும்வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது நில மதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை தொழில்முனைவோர் கடன் பெற முடியும். தற்போது சிறு, குறு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக அளிக்கப்பட்டுள்ள ரூ.250 கோடியில், 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.160 கோடி வரை முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago