மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய - கிராம ஊராட்சி செயலர் கைது :

By செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம ஊராட்சிச் செயலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

வில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் மனைவி முனியம்மாள்(65). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி கேட்டு கான்சாபுரம் ஊராட்சியில் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.1.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆனால், இதற்கான உத்தரவு மற்றும் தொகையை விடுவிக்க கான்சாபுரம் ஊராட்சிச் செயலர் அய்யனார், முனியம்மாளிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர முடியாது என முனியம்மாள் கூறியதால், ரூ.10 ஆயிரம் தருமாறு அய்யனார் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத முனியம்மாள், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி கான்சாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் அய்யனாரிடம் முனியம்மாள் ரூ.10 ஆயிரத்தை தந்தார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்