கடந்த 1950-ம் ஆண்டு ‘டகோட்டா' என்ற சிறிய ரக விமானம், 20 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து, கோவை விமான நிலையம் நோக்கி வந்துள்ளது. வரும் வழியில் கீழ்கோத்தகிரி அருகே ரங்கசாமி மலைப் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். கடந்த 1982-ல் ஒரு பயிற்சி ஜெட் விமானம் குன்னூர், வெலிங்டன் கம்பிசோலை பகுதி வழியாக வந்தபோது விபத்து ஏற்பட்டதில், அதில் பயணித்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். அதன் பிறகு நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்துதான் இப்பகுதியில் நடைபெற்ற பெரிய விபத்து என குன்னூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டரின் சிறப்புகள்
விபத்துக்கு உள்ளான எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர் ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதில், ஒரே நேரத்தில் 36 பேர் வரை பயணிக்கலாம். 4 டன் வரையிலான சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும் திறனுடையது. தேடுதல், மீட்புப் பணிக்கு இந்த ஹெலிகாப்டர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago