சிருங்கேரி சாரதா பீடாதிபதியுடன் தருமபுரம் ஆதீனம் சந்திப்பு :

By செய்திப்பிரிவு

சிருங்கேரி  சாரதா பீடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரிய   விதுசேகர பாரதீ சுவாமிகளை தருமபுரம் ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினார்.

கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

சிருங்கேரி  சாரதாம்பாள்,  ஆதிசங்கரர்,  வித்யாசங்கரர் கோயில்களில் தரிசனம் செய்த அவர், பின்னர் நரசிம்ம வனத்தில் சிருங்கேரி  சாரதா பீடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரிய   விதுசேகர பாரதீ சுவாமிகளை நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக சிருங்கேரி  சாரதா பீடத்துக்கு வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு பீடத்தின் நிர்வாகி வி.ஆர்.கவுரிசங்கர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்