டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகடந்த 2019 செப்.1-ல் நடந்தது.அதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள்2019 நவ.12-ல் வெளியிடப்பட்டன.
இத்தேர்வுக்கான 2-வது கட்டஅசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு டிச.18, 20-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago