பண்ணை பசுமை கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.70 முதல் விற்கப்படுவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் பல பகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் தொடர் மழை காரணமாக தக்காளிவரத்து குறைந்ததால், தற்போது ஒரு கிலோ ரூ.120 முதல் 130 வரைவெளிச் சந்தையில் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டுறவு துறை நடத்தும் 65 பண்ணை பசுமை கடைகள் மூலம் 10 டன்தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூ.70 முதல் 95 வரை விற்கப்படுகிறது. திருச்சியில் ரூ.70, சென்னையில் ரூ.75, கோவையில் ரூ.92, மதுரையில் ரூ.95 என விற்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago