இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரதுசிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு நாடாளுமன்ற திமுக குழு துணைத்தலைவர் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், துறைமுக வளாகத்தில் உள்ளஅம்பேத்கர் சிலைக்கும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
விசிக தலைவர் திருமாவளவன்கோயம்பேடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்பாலகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நாம் தமிழர்ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago