கல் குவாரிக்கு ரூ.20 கோடி அபராதம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல் குவாரிக்கு ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் பகுதியில் 19-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் இருந்து அளவுக்கதிகமாக கற்களை எடுத்து அண்டை மாநிலமான கேரளாவுக்குக் கொண்டு செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர், நில அளவை உதவி இயக்குநர், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 19 குவாரிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் என்.இசக்கியப்பன் என்பவர் குத்தகை எடுத்திருந்த கல்குவாரிக்கு, நேற்று ரூ. 20.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இன்று நேரில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட குவாரி குத்தகைதாரருக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்