ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது ஏற்பட்டமோதல் தொடர்பாக அமமுகவினர் மீது போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் காரை அமமுகவினர் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதில், அதிமுக மற்றும் அமமுகவினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காலணிகள் வீசப்பட்டன. போலீஸார் தலையிட்டு பழனிசாமி கார் வெளியே செல்ல ஏற்பாடு செய்தனர். சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகரான மாறன் என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து ஆபாசமாக பேசுதல், சிறு காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் அமமுகவினர் மீது அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago