தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 4,522 பயணிகளிடம் சோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் பெண் ஒருவர் குணமடைந்துள்ளார். அவர்களின் மாதிரிகள் மரபியல் ரீதியான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதல்கட்ட தகவலின்படி, அவர்களுக்கு ஒமைக்காரன் பாதிப்பு இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு ஆகும்.
தமிழகத்தில் தற்போது வரை7.4 கோடி பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 1.29 லட்சம் குடியிருப்பில் 1.27 லட்சம் குடியிருப்பில் பாதிப்புஇல்லை. 1.27 லட்சம் தெருக்களில் 1.25 லட்சம் தெருக்களில் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
724 பேருக்கு கரோனா
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 430, பெண்கள் 294 என மொத்தம்724 பேர் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 131, கோவையில் 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்புஎண்ணிக்கை 27 லட்சத்து 30,516-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 26 லட்சத்து 85,946 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 743 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 8,041 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து529-ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago