ரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
இரவு 7.45 மணிக்கு திருநெடுந்தாண்டக அபிநயம், வியாக்யானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் திருப்பணியாரம் அமுது செய்யப்பட்டு, கோஷ்டி, திருவாராதனம், சிறப்பு அலங்காரம், தீர்த்தகோஷ்டி நடைபெற்றன. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து திருநாள் இன்று தொடங்கி டிச.13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், டிச.13-ம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக டிச.14-ம்தேதி அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்று முதல் ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. டிச.24-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago